Friday, March 4, 2011

தமிழ்நாட்டில் நாடோடிகள்

கடந்த மார்ச்சு மாதம் 2010 அன்று புதுச்சேரி அரசின் நூலகமான ரோமன் ரோலன் நூலகத்தில் ‘தமிழகத்தில் நாடோடிகள் சங்க காலம் முதல் சமகாலம் வரை’ என்ற நூலைப் படித்தேன்.
அந்நூலின் பதிப்பாசிரியர் திரு பக்தவத்சல பாரதியாவார், இந்நூலில் மொத்தம் 21 கட்டுரைகள் உள்ளது. அவற்றுள் இரண்டு கட்டுரைகளைப் பதிப்பாசிரியரும் ஏனைய கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எழுத்தாளரும் எழுதியுள்ளனர். இதில் மூன்று கட்டுரைகள் நாடோடிகளைப் பற்றிய பொதுவான கட்டுரைகள் ஏனைய 18 கட்டுரைகளும் ஒரு குறிப்பிட்ட நாடோடிக் கூட்டத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு கட்டுரையும் நாடோடிகளின் இன்றைய வாழ்க்கை முறை, அவர்கள் தமிழகத்திற்குக் குடிபெயர்ந்த தோராயமான காலம், சமயம், தொழில், இன்றைய நிலை, தாய் மொழி போன்ற இன்னும் ஏராளமான செய்திகளைத் தாங்கியுள்ளன. தமிழுக்குக் கிடைத்துள்ள அருமையான நூலாகும். இதனை தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் சிறு சிறு கூட்டங்களாக நாடோடிகள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் மொழி நமக்குப் புரியாத வேற்று மொழியாகவே இருக்கிறது. அவை எந்த மொழி என்று பலமுறை குழம்பி இருக்கிறேன். அதன் பொருட்டு இந்நூலைத் தேர்ந்தேடுத்தேன். இதனால் என் பெரும் குழப்பங்கள் தீர்ந்தது. என் குழப்பத்தைத் தீர்த்தது போல் தங்களின் குழப்பங்களையும் தீர்க்கும் என்று கருதி அந்நூலில் உள்ள நாடோடிகளின் தாய் மொழிபற்றிக் கூறிப்பிட விரும்புகிறேன்.

பூம்பூம்மாட்டுக்காரன் - தெலுங்கர்

மண்டிகர் (கணிகர்) - மராத்தி
(தோல்பாவைக் கூத்து)

பதானிடர் - பதானியா (குஜராத்தி, மராட்டி,
(கழைக்கூத்தாடி) இந்தி கலந்த மொழி)

நாழிமணிக்காரர் - தெலுங்கர்
(கண்ட ஜங்கம்)

ஐங்கம் பண்டாரம் - தெலுங்கர்

குடுகுடுப்பை நாயக்கர் - தெலுங்கர்

குறவர் - தமிழர்

நரிகுறவர் - வாக்ரிபோலி (இந்தி,உருது,
குஜராத்தி கலந்த மொழி)

வேட்டைக்காரர் (இருளர்) - தமிழர்

சட்டையடிக்காரர் - தெலுங்கர்

சாதிப்பிள்ளை (நோக்கர்) - தெலுங்கர்

லம்பாடி - கார்போலி

பண்டாரம் - தமிழர்

ஜோகி - தெலுங்கர்

குளுவர் - தெலுங்கர்

இடையர் - தமிழர்

பக்கீர் - உருது

கும்பார் (குஜராத்தி குயவர்) - மேவாரி


சபெ