Monday, February 21, 2011

‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’

‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’
(ஒர் பார்வை)

கடந்த சனவரி 2011 அன்று சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன் அதில் மூன்று புத்தகங்களை வாங்கினேன் அதில் ஒன்று தமிழ்வாணன் எழுதிய ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’ என்ற நூலாகும்.
அந்நூலில் உள்ள பல செய்திகள் நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்கு மாறாக இருந்தன எனவே அதனைத் தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலில் என்னை வியப்பில் ஆழ்த்தியது கட்டபொம்மனின் தாய் மொழி தெலுங்கு என்பதாகும். பலபேர் இன்று வரை கட்டபொம்மனை பச்சைத் தமிழன் என்றே போற்றிப் பரப்புரை செய்து வருகிறார்கள். ஒரு தெலுங்கனைத் தமிழன் என்று காட்டிக்கொள்வதில் தமிழர்களுக்கு என்ன பெருமையோ அல்லது தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களுக்குத் தான் என்ன சிறுமையோ தெரியவில்லை. ஆகமொத்தத்தில் கட்டபொம்மன் தெலுங்கன் என்பதில் தெளிவு கொள்வோம்.
கட்டபொம்மனின் பரம்பரையில் முதலாமவன் கட்ட பிரமையா ஆவான் இவன் மகன் கட்டபிரமையா என்ற முதலாம் ஜெகவீரப் பாண்டிய கட்டபொம்மன் என்பவனே முதல் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனாவான் (1709-1736) இவரே வீரபாண்டியக் கட்டபொம்மனின் கொள்ளுப் பாட்டனும் ஆவார்.
வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கும் வெள்ளையன் கலெக்டர் ஜாக்சனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை தமிழ்வாணன் அவர்கள் தன்னுடைய ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’ நூலில் குறிப்பிட்டுள்ளதை மிகச் சுருக்கமாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன், வரிகட்டச் சொல்லி வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்புகிறார். வீரபாண்டியக் கட்டபொம்மனோ தவணை மேல் தவணை சொல்லித் தட்டிக்கழித்து வருகிறான். இதனால் ஆத்திரம் கொண்ட ஜாக்சன், தன்னை 05.09.1798 அன்று இராமநாதபுரத்திற்கு நேரில் வந்து பார்த்து விளக்கம் (பேட்டி) தரவேண்டும் இல்லையேல் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம் பறிமுதல் செய்யப்படும் என்று கடிதம் அனுப்பினார்.
ஜாக்சனின் கடிதத்தைக் கண்டதும் கட்டபொம்மன் குறிப்பிட்ட நாளில் ஜாக்சனைப் பார்க்க இராமநாதபுரத்திற்குத் தன் பறிபாரங்களுடன் செல்கிறார். கட்டபொம்மன் தன்னைப் பார்க்க வருகிறார் என்று அறிந்ததும் ஜாக்சன் குற்றாலத்திற்குக் கிளம்பிவிடுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திப்பதற்காக, ஜாக்சனை பின் தொடர்ந்து குற்றாலத்திற்கு செல்கிறார் அங்கும் கட்டபெம்மனை பார்க்க ஜாக்சன் மறுத்துவிடுகிறான். இப்படியே ஒவ்வொரு ஊராக அதாவது சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, சிறிவில்லிபுத்தூர், பேரையூர், பவாலில், பள்ளிமடை, கமுதி என்று சுற்றி இறுதியில் இராமநாதபுரத்தை வந்தடைந்தார் ஜாக்சன். கட்டபொம்மனும் ஜாக்சன் சென்ற ஊருக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதில் எந்த ஊரிலும் கட்டபொம்மனை சந்திக்க விரும்பாமல் அலைகழித்து வந்தார்.
இறுதியில் கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்து விளக்கம் கொடுத்தான், வரிகட்டாமையைப் பற்றி ஜாக்சன் கேட்க, தான் கட்ட வேண்டிய பணத்தையும் கையோடு கொண்டுவந்துள்ளதாகக் கூறினான். அடுத்து அரசு கிராமங்களில் குழப்பம் ஏற்படுத்தியது தொடர்பாக கேட்க, அப்படியேதும் நான் செய்யவில்லை என்று கட்டபொம்மன் மறுத்துக் கூறுகிறார். இறுதியாக, “நமக்குள் ஏற்பட்ட இந்த உரையாடலைச் சென்னைத் தலைமைக்கு அனுப்புகிறேன் அதற்கான பதில் வரும் வரை நீங்கள் இங்கு இருக்கவேண்டும்” என்று ஜாக்சன் கூறியதும் கட்டபொம்மன் அஞ்சி அங்கிருந்து தப்பிவிடுகிறார். அவர் தப்பும் போது ஏற்படுகிற கலவரத்தில் ஒரு வெள்ளையன் கொலை செய்யபடுகிறான். கட்டபொம்மனின் அமைச்சனும் ஆலோசகனுமான தானாபதிப் பிள்ளை கைது செய்யப்படுகிறார்.
இந்த நிகழ்வு கட்டபொம்மனை வீரனாகக் காட்டுகிறதா? அல்லது வெள்ளையனுக்கு அடிபணிந்தவனாகக் காட்டுகிறதா? மேற்கண்ட நிகழ்வு பற்றிய பதிவு இன்றும் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது என்கிறார். அப்படி என்றால் கட்டபொம்மன் வெள்ளையனுக்கு அஞ்சினான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அந்நூலில் குறிப்பிட்டுள்ள மற்றுமொரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டும் அதாவது கட்டபொம்மனைத் தூக்கில் போடுவதற்கு கூறப்பட்ட காரணங்களும் நிகழ்வுகளும் ஆகும்.
கட்டபொம்மனை பற்றிக் கூற ஆரம்பித்ததில் இருந்தே கட்டபொம்மன் தன்னுடைய பாளையத்தை விடுத்து மற்றைய பாளையங்களில் அவ்வப் போது கொள்ளையடித்து வந்துள்ளான் என்று கூறிப்பிட்டுள்ளார். அதில் ஊற்று மலைப் பாளையத்தார் தங்கள் பாளையத்தில் கட்டபொம்மன் கொள்ளையடித்ததை வெள்ளையனிடம் புகார் தெரிவித்துள்ளார். அடுத்து சிவகிரி பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஆட்சியைப் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கட்டபொம்மன் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியது மற்றுமொன்று தனது தம்பி மற்றும் தனது அமைச்சன் தானாபதிப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வெள்ளையனின் நெற் களஞ்சியத்தைத் தன் ஆட்களை விட்டுக் கொள்ளையடித்தது. இது போன்ற புகார்களை அடுத்து கட்டபொம்மனை மேஜர் பானர்மென் தன்னை சந்தித்து விளக்கம் தரக் கூறுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க அஞ்சு நாட்களைக் கடத்துகிறார். தன்னை சந்திக்காமல் காலம் கடத்தியதால் பானர்மென் பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுக்கிறார். சண்டை நடக்கும் போதே கட்டபொம்மன் தனது பாளையத்தில் இருந்து தப்பிவிடுகிறார். (இந்த இடத்தில் தமிழ்வாணன் ஒன்றைக் குறிப்பிடுகிறார் அதாவது கட்டபொம்மன் தப்பித்ததே திருச்சியில் உள்ள வெள்ளைகார மேல் அதிகாரியிடம் சென்று மன்னிப்புக்கேட்டு தப்பிவிடலாம் என்பதற்காகவே தப்பினான் என்கிறார்).
கட்டபொம்மனைப் பிடிப்பதற்காக பானர்மேன் எட்டயபுர பாளையத்திடம் இருந்து நன்கு வழிகளைத் தெரிந்த சில வீரர்களை கேட்டுப் பெற்றுக் கொண்டு கட்டபொம்மனைத் தேடலானான். அதன் பிறகு கட்டபொம்மன் புதுக்கோட்டைப் பாளையத்தில் உள்ள ஒரு காட்டில் மறைந்திருப்பதை அறிந்ததும் பானர்மேன் கட்டபொம்மனைப் பிடித்துத் தரும்படி கேட்கப் புதுக்கோட்டைப் பாளையத் தளபதி அம்பலக்காரன் தலைமையிலான குழு கட்டபொம்மனைப் பிடித்து பானர்மேனிடம் ஒப்படைத்தார்கள். மேற்கண்ட பத்தியில் குறிப்பிட்டுள்ள காரணங்களைக் காட்டி தூக்கில் போடுகிறார்கள்.

நமக்குள்ள வருத்தங்கள் எவையென்றால்

 ஒரு தெலுங்கனைத் தமிழன் என்று பரப்புரை செய்வது,

 வெள்ளைக்காரனுக்கு அவ்வப்போது பணிந்து சென்ற ஒருவரை முழுக்க முழுக்க வெள்ளையனை எதிர்த்தான் என்று பரப்புரை செய்வது.

 எட்டப்பன் என்ற ஒருவனைத் தமிழ்வாணன் அவர்கள் குறிப்பிடவேயில்லை. ஆனால் திரைபடத்தில், காட்டிக் கொடுத்தான் என்று எட்டப்பன் என்ற ஒருவனைக் காட்டியுள்ளது.

 ஆக, கட்டபொம்மன் என்று எடுக்கப்பட்ட திரைப்படம் பாதிக்கு மேல் வரலாற்றுப் பிழையாகவே இருக்கும் என்று கருதுகிறேன். அதில் “வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் தரவேண்டும் கிஸ்தி (வரி)” போன்ற நீண்ட வசனத்தைப் பேசியிருக்க மாட்டான். அப்படியே பேசியிருந்தாலும் தெலுங்கில் தான் பேசியிருக்க வேண்டும்.

ஆக, தெலுங்கனுக்குத் தமிழன் அடிமை, வெள்ளையனுக்குத் தெலுங்கன் அடிமை அப்படியென்றால் அன்றைக்குத் தமிழகத்தை ஆண்ட தெலுங்கனுக்கு தமிழன், அடிமைக்கு அடிமையாகத் தான் இருந்துள்ளான்.
தமிழர்களே அவசியம் இந்நூலை வாங்கிப் படித்து தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை அறிந்துக் கொள்ளுங்கள்.

சபெ






“வெள்ளையனுக்கு அடிமைப்படாத ஒரு சுதந்திர அரசுக்கு அதிபதியாக இருந்திருந்தால், கட்டபொம்மன் கலெக்டரைக் காணப் போயிருக்க வேண்டியதில்லை. கலெக்டரின் ஆணையை அவன் ஆண்மையுடன் மறுத்து நின்றிருக்கலாம். அவன் என்றுமே கும்பினிக்கு வரி செலுத்தாதவனாக இருந்தால், புதிதாக வந்து வரி கேட்பவர்களிடன் கொடுக்க முடியாது என்று உறுதியுடன் கூறியிருக்கலாம். அவன் எழுதியுள்ள எந்த ஒரு கடிதத்திலும், கட்டபொம்மன் ஆங்கிலக் கும்பினியின் மேலாதிக்கத்தை எதிர்க்கவில்லை. வரி கொடுக்க முடியாது என்றும் சொல்லவில்லை. அதற்கு மாறாக, வரி செலுத்துவதற்கு தவணைகள் தாம் கேட்டிருக்கிறான் அல்லது சாக்குப்போக்குகள் சொல்லி வந்திருக்கிறான்” (பக்கம் 159, கட்டபெம்மன் கொள்ளைக் காரன்)

48 comments:

  1. மிக்க நன்றி நண்பா இதை பதிவு செய்ததற்கு ...

    ReplyDelete
    Replies
    1. ஆதாரம் இருந்தால் பேசுங்கள் இல்லை என்றால் ஆறு அடி குழியில் படுங்கள்

      Delete
    2. இது தவராத கருத்து

      Delete
    3. தமிழ்வாணன் அவர்களது மீது எனக்கு பெருமதிப்புள்ளது. அவரது இந்த புத்தகம் தமிழினத்திற்கே விழிப்புணர்வை தருவதாக அமையும் என்பது நிச்சயம். திராவிடம் என்ற போலித் தத்துவத்தை வைத்து தமிழர் போர்வையிலுள்ள பிறமொழியாளர்கள் தமிழகத்தை கைப்பற்றி இன்றளவும் கொள்ளையடித்து வருவது தொடர்கிறது. இதுபோன்று வரலாற்று திரிபுகளை வெளிப்படுத்தும் நூல்களை தமிழர்கள் நிறைய படித்து விழிப்புற வேண்டும்.

      Delete
  2. கட்டபொம்மன் நல்லவனே. அந்த தமிழ்வாணன் ஒரு குறிப்பிட்ட மனிதனிடம் வசமாக அடி வாங்கி இருக்கிறான். அம்மனிதன் ஒரு குறிப்பிட்ட, அதவாது கட்டபொம்மன் பிறந்த சாதியைச் சார்ந்தவன். அதனாலேயே இந்த அவச்செயலை அந்தக் கோழை செய்திருக்கிறான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் தழிழ்வாணன் அடி வாங்கியுள்ளான்...அதற்கான புத்தகம்..நாம் டம்ளர் சீத்தி என்ற புத்தகம் உள்ளது..

      Delete
    2. Thanks for saying the truth to the world kattamommalu is fucking Telugu guy doesn't have patriotism towards country.

      Delete
    3. டேய் ப்ராடு வந்தேறி வடுக தெலுங்கு சொம்பு எல்லாம் அடக்கும் காலம் இது,

      Delete
  3. கட்டபொம்மன் நல்லவனே. அந்த தமிழ்வாணன் ஒரு குறிப்பிட்ட மனிதனிடம் வசமாக அடி வாங்கி இருக்கிறான். அம்மனிதன் ஒரு குறிப்பிட்ட, அதவாது கட்டபொம்மன் பிறந்த சாதியைச் சார்ந்தவன். அதனாலேயே இந்த அவச்செயலை அந்தக் கோழை செய்திருக்கிறான்.

    ReplyDelete
    Replies
    1. நீ பக்கத்தில் இருந்து பார்த்தாயோ...வரலாறு தெரியுமா உனக்கு.தமிழ்வாணன் பொய் எழுத வேண்டிய அவசியம் இல்லை.மேலும் தெலுங்கனிடம் எல்லாம் அடிவாங்கும் அளவு உங்களைப் போன்ற பேடிகளும் இல்லை.தொட முடியாத உயரத்தில் இருந்தவர்.நகரத்தார் என்ற உயர்ந்த சமூகத்தைச் சேர்ந்த பண்பாளர்.நற்குடிப்பிறப்பாளர்.மண்ணின் மைந்தர்.உண்மை ஆவணங்களின் குறிப்புகளோடு வரலாற்று பிழைகளை சுட்டிக் காட்டவேண்டியே கட்டபொம்முலு பற்றி எழுதினார்.ஜாதி மத மொழித்துவேசங்களுக்கு அப்பாற்பட்டவர் அவர்.இவ்வளவு காலமாக எங்கள் மண்ணில் இருக்கும் தெளுங்கர்களை நாங்கள் ஒருபோதும் வேற்றுமையாக தெலுங்கராக பார்த்ததில்லை.தெலுங்கே தமிழின் மற்றொரு வடிவம் தான்.தெலுங்கர்களை சகோதரர்கள் போன்ற பாசத்தோடு தானே தமிழர்கள் பழகி வருகின்றார்கள்.கட்டபொம்மு தெலுங்கர் என்று துவேசம் எங்களுக்கு இல்லை.அவன் கொள்ளையன் தீயவன் என்பதே விசயம்.அவன் சுதந்திரத்திற்கு எல்லாம் பாடுபடவில்லை.தனது தேவைக்காக பாடுபட்டிருக்கிறான் என்பதே ஆதாரங்களோடு கூடிய சத்தியமான உண்மை.கட்டபொம்மன் அவன் இவன் என்று ஏகவசனத்தில் சிறுபிள்ளை கூட கூறலாம்.ஏனென்றால் தமிழர்களுக்கு திரைவடிவில்,தமிழினத் துபாஷிகளால் அறிமுகமான கட்டபொம்மு கற்பனைக் கதைப்பாத்திரம் மட்டுமே.ஆனால் தமிழ்வாணனை எந்த ஈனனுக்கும் அவன்,இவன் என்று பேசத் தகுதி கிடையாது.அப்பாவிகளிடம் கொள்ளையடித்தவன் கோழையா?
      அவன் வேடத்தை விளக்கி மக்களுக்கு காட்டிக் கொடுத்தவர் கோழையா?

      Delete
    2. டேய் அவர் கெட்டவர் தானு நேர்ல சொல்ட்ரா பாக்கலாம் இத என் 7871571728

      நான் மதுரை தான் வா ஆம்பளன வாடா கொம்மல பொட்டு ஓக்க

      Delete
    3. இந்த எண் தவறு என்று சொல்கிறதே... அந்த கட்டபொம்மனை விட கெட்டபொம்மனாக இருப்பீங்க போல...

      Delete
  4. இந்த கெட்ட பொம்மு என்பவரை நல்லவனாக்கியதே நமது தமிழர்கள் தான்.இவன் பக்கத்து பாளையங்களில் அநியாயமாக கொள்ளையிட்டதற்கான ஆவணங்கள் அரசு பதிவாக இருக்கின்றன.மேலும் வெள்ளை அரசாங்கத்தாரிடமும் ஜாக்சனுக்கும் பயந்துபோய் கடிதங்கள் எழுதி மன்னிப்பு கேட்ட விசயங்களும் உண்டு.
    தானாபதி என்றவன் இவனது மந்திரி.அவன் ஜாதியைச் சேர்ந்த அபிமானிகள் தமிழ் போர்வை போர்த்திக் கொண்டு திரிந்த வரலாற்று கசடர்கள் இவர்கள் தனது ஜாதிப் புகழை நேரடியாக பாடத் துப்பிலாமல் கெட்டபொம்முவை கதாநாயகனாக்கி அவன் மந்திரியின்(தனது ஜாதி) உயர்வை கூற செய்த சதி,உண்மையான போராட்ட வீரர்களான பூலித்தேவன் போன்றோரின் உண்மை சரித்திரத்தை குழி தோண்டி புதைத்ததும் நமது துபாஷி வேலை செய்த தமிழ் இனமான மூதேவிகளே.போதாதா இது போன்ற உள்நாட்டு துரோகிகளின் உதவி ஒன்று மேற்கண்ட கட்ட பொம்மு நல்லவனே என்ற நல்லவர்களுக்கு...படம் எடுத்த நல்லவர்கள் இது புரியாமலே எடுத்து அதையும் நம் மடத்தமிழர்களுக்கு கதாநாயகனாக காட்டி விட்டனர்.யானைகளை கொன்று தந்தம் கடத்தி,சந்தன மரங்களை வெட்டி காட்டையும் எரித்து அதை எதிர்த்த அரசாங்க அதிகாரி,காவல் துறையினரின் உயிர்களை துச்சமாக அழித்து சுயநலமாக பொதுநல வேடமிட்டு வாழ்ந்த வீரப்பன் நல்லவன் என்றால் கெட்டபொம்மு நல்லவனே.

    ReplyDelete
  5. இது ஒரு ஜாதீய காழ்புணர்ச்சியில் எழுதப்பட்ட கட்டுரை. கட்டபொம்மனும் மருது சகோதரர்களும் நண்பர்கள் என்றால் மருது சகோதரர்களும் கொள்ளையர்களா? மன்னன் எப்படி ஒரு கொள்ளயனோடு நட்பு வைத்திருந்தார்கள். ஒரு மன்னன் இன்னொரு மன்னனோடுதான் நட்பு வைத்திருப்பான். இது ஒரு சின்ன குழந்தைக்கு கூட தெரியும். இவரின் ஜாதிய காழ்புணர்ச்சி சுய புத்தியை மறைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஞாயமானவார்த்தை

      Delete
    2. கொள்ளைக்காரனுக்கு நண்பன் இருக்கக்கூடாதா?

      Delete
  6. ட்டபொம்மன் கொள்ளையன் என்றால் அவன் அமைச்சரவையில் உள்ள சேனாபதி பிள்ளை, வெள்ளைய தேவர், சுந்தரலிங்கம்(ஹரிஜன்) இவர்களும் கொள்ளையர்கள்தானே. அவன் நல்லவனோ கெட்டவனோ, ஆனால் தன் அமைச்சரவையில் எல்லா சமூக மக்களையும் வைத்து அழகு பார்த்தான். ஒரு மன்னன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கினான். தமிழனாக இருந்தால் தன் ஜாதிக்காரனை அல்லவா உட்கார வைத்திருப்பான்.

    ReplyDelete
    Replies
    1. சுந்தரலிங்கம் ஹரிஜன்,, ராஜ் அவர்களே ஹரிஜன் என்ற வார்த்தையே 11.02.1932 ல் தான் காந்திபயன்படுத்தியது, உலக சுதந்திர போராட்டதில் முதல் தற்கொலை செய்து எதிரிகளின் ஆயுத கிடங்கை அழித்த மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார்,

      Delete
    2. வெள்ளைகாரனின் பாளையக்காரன்தான் கட்டமொம்முலு நாயக்கர் , உண்மைவரலாறுகள் எல்லாம் திட்டமிட்டு அழிக்கபட்டு திருத்தப்பட்டு திரிக்கப்பட்டு அவர்கள் அவர்கள் ஆசைப்படி எழுதப்பட்டிருக்கிறது

      Delete
    3. கட்டபொம்மு ஒரு பாளையக்காரர். பாண்டியகுலத்தவர்களின் வாரிசுகளைக் கொன்றதினால் பெற்ற பட்டம் பாண்டி .இடம் பாஞ்சாலங்குறிச்சி

      Delete
  7. காலபோக்கில், திருவள்ளுவரையும் தவரனவராக சித்தரிக்கவும் தயங்க மாட்டார்கள்! தமிழா விழித்திரு, நம்மை சாதி பெயரால், மதத்தின் பெயரால் வேற்றுமை படுத்த பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் சூழ்ச்சியில் நாம் சிக்கி தவித்து கொண்டிருக்கிறோம்! விடுபடுவோம் அதிலிருந்து! காப்போம் நம் இனத்தை.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. பதிவிற்கு நன்றி.
    இப்புத்தகம் வாங்க விரும்புகிறேன். பதிப்பகத்தார் விவரங்கள் கொடுங்கள் தோழர். எமது இணைய அஞ்சல் முகவரி:
    mail2sriarul.ms@gmail.com

    ReplyDelete
    Replies
    1. https://www.udumalai.com/kattabomman-kollaikaran.htm

      Delete
    2. இதை நம்பாத உண்ணையும் அடி வாங்க வைக்கராங்க..

      Delete
  12. இது கீழ்த்தரமான ஆங்கிலேயரின் கைக்கூலியான ஒருவர் எழுதிய ஆதாரமற்ற ஜாதி வெறி இனவெறி பிடித்தவனின் பொய்யுரை. 12ம் நூற்றாண்டிலிருந்து தெலுங்கர் கன்னடர் தமிழர் தெனிந்தியாவில் ஆட்சி செய்துள்ளார்கள். அப்புறம் என்னய்யா திராவிடம்? ஈ.வெ.ரா. தெலுங்கர். அண்ணாதுரை கன்னட முதலியார்.MGR மலையாளி.

    ReplyDelete
  13. சூரியனைப் பார்த்து குரைத்தால் சூரியனுக்கு என்ன ஆகும்? இனவெறியில் எழுத வேண்டாம்.

    ReplyDelete
  14. Hi,

    The book ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’ is out of print, hence I request you to help me with Xerox copies of the same. If you are interested to provide them, please let me know; pradeepjna@gmail.com
    Thanks and regards,
    Dr. Pradeep JNA

    ReplyDelete
    Replies
    1. sir if u have this book please send to thillai1121@gmail.com

      Delete
  15. இத எழுதிய நாயப்பாத்தா சொல்லுங்க

    ReplyDelete
  16. ஒரு உதவி இந்த புத்தகம் வெளிவந்த ஆண்டு கூறமுடியுமா...

    ReplyDelete
  17. தேவிடியா மகன் தமிழ்வாணன்

    ReplyDelete
    Replies
    1. நீதான் தேவுடியா மவனா இருப்ப

      Delete
    2. you are the son of pro----

      Delete
  18. Kandeepa Sundaram
    https://senkettru.files.wordpress.com › ...PDF
    low - செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

    ReplyDelete
  19. https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://senkettru.files.wordpress.com/2018/09/low.pdf&ved=2ahUKEwjugpfE5ZDlAhUC6XMBHTxqDtcQFjAMegQIChAB&usg=AOvVaw0DDRKFB7GQoZPIMnJFnI8t&cshid=1570679687313

    ReplyDelete
  20. தட்சிணாமூர்த்தி சின்னமேளனம் ஆட்ச்சிக்கு வந்தவுடன் இந்த ஆதாரங்களை தீவைத்து கொளுத்தியது தெலுங்கு திராவிட தட்சிணாமூர்த்தி சின்னமேளனம் எனும் கருநாக கருணாநிதி எனும் ஈனன்.

    ReplyDelete
    Replies
    1. சரியாக கூறினீர்கள் அந்த நச்சு பாம்பின் கொடுபாதக செயலால் தான் இன்றும் தமிழ் சமூகங்களுக்கிடையே மோதல்களும் புரிதல்களும் இல்லாமல் சண்டையிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் தம் வரலாறு மறந்து

      Delete
  21. உண்மைய சொன்னா இவனுகளுக்கு கோவம் வரத்தான் செய்யும், அந்த அளவு தமிழகத்தில் தமிழரின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது தமிழனின் ஒற்றுமையில்லாமையால் தமிழகத்தில் இருந்து கொண்டே தமிழனை இழிவாக பேசும் தைரியம் இவனுகளுக்கு

    ReplyDelete
  22. https://sitegallery.ru/video/RQIVVCY1CAoIPkE/-.html

    ReplyDelete
  23. அந்த கட்டபொம்மன் படம் எடுத்தவன் பந்துலு என்கிற இயக்குனர் ஒரு தெலுங்கன்..எப்படியெல்லாம் தமிழரை ஏமாற்றி பிழைச்சி இருக்காங்க..ஓ GOD..

    ReplyDelete
  24. சினிமா பார்த்து சரித்திரம் படித்தால் இப்படித்தான் ஆகும். சினிமா கலெக்சன் கல்லா கட்ட எடுப்பது. இதே போல் தான்..நந்தனார்... சினிமாவும். சேக்கிழார் புராணத்தில் (......திருநாளைப் போவார்...... என்கிற ஒரிஜினல் நந்தனார் சரித்திரத்தில்) வில்லன் ஐயர்(Ayyar) எ‌ன்று யாரும் கிடையாது. நந்தனார் சிறு அளவில் நிலம் வைத்து பயிர் செய்து கொண்டிருந்தார். அதற்குப் பெயர் ...பறைத் துடைவை மான்யம்..... என்று பெயர். அது கோவில் நிலம். கோவிலுக்கு நந்தன் சிறிது நெல் அளக்க வேண்டும் - அவர் ஒப்புக் கொண்ட கோவில் நில கட்டளைப்படி. கோவிலுக்கு ஒழுங்காக மானிய நெல்லை அளந்துவிட்டால், மானியம் பரம்பரையாக தொடரும். பல ஜாதியாருக்கும் அப்போது கோவில் மானியம்(கட்டளை) இருந்தது. மானியங்கள் தானம் கொடுத்தவர்களால் (ராஜா, தனி ஆட்கள், பக்தர்கள் etc ) கோவிலுக்கு வந்தது. கோபால கிருஷ்ண பாரதி என்கிற பார்பனர், முத‌லி‌ல் நாடகமாக ...... நந்தன் டிராமா..... எழுதிய போது BOX OFFICE கல்லா கட்ட - ஒரு வில்லன் பாத்திரம் இருந்தால் அதுவும் பார்பன வில்லன் நந்தனுக்கு எதிராக என்றால் - மற்றவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல் குஷியாக இருக்கும் என்று ( புரட்சிப் புடலங்காய் ஈ வே ரா- க்கும் முன்பே தமிழன் Mass Psychology யை சரியாக யூகித்து), உண்டு பண்ணிய ஐயர் கதாபாத்திரம்தான் வில்லன் அய்யர். நம்பியார் இருந்தால்தானே எம் ஜி ஆர் சினிமா களைகட்டும். ஐயர் வில்லனால் நாடகம் நன்கு கல்லா கட்டியதால், சினிமாவில், அதையே ஃபார்முலா மாற்றாமல் வைத்துள்ளார். அவ்வளவே.

    ReplyDelete
  25. திராவிடம் தமிழர்களுக்கு பண்ணிய மிகப் பெரிய துரோகம் பள்ளிகளில் mother tongue என்ற column த்தை இல்லாமல் பண்ணினது...
    இதன் pdf எடுத்து எல்லா தமிழர்கழுக்கும் பரப்ப வேண்டும்.

    ReplyDelete